» சினிமா » செய்திகள்

தல என்று அழைக்க வேண்டாம் : ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வேண்டுகோள்

புதன் 1, டிசம்பர் 2021 3:29:32 PM (IST)

தல என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தற்போது வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில நடித்து வருகிறார். வலிமை திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹூமா குரேஷி, சுமித்ரா, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரவும் காலங்களில் என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ எழுதும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. 

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.  உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory