» சினிமா » செய்திகள்

கரோனாவில் இருந்து குணமடைந்து விட்டார் கமல்!

புதன் 1, டிசம்பர் 2021 3:32:31 PM (IST)

நடிகர் கமல்ஹாசன் கரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கரோனாவினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வந்த விக்ரம் திரைப்படம் பாதியில் நிற்கிறது. 

இந்த நிலையில் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ''நடிகர் கமல்ஹாசன் கரோனாவில் இருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டார். மேலும் வரும் 3 ஆம் தேதி வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார். பின்னர் அவர் வழக்கமான பணிகளுக்கு திரும்புவார்'' என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory