» சினிமா » செய்திகள்
விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக இளையராஜா புகார்!
வியாழன் 2, டிசம்பர் 2021 4:48:09 PM (IST)

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ படத்தின் மேல் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்திருக்கிறார்.
’காக்கா முட்டை’ ‘ஆண்டவன் கட்டளை’ குற்றமே தண்டனை’ படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வெளியாகத் தயாராக இருக்கும் திரைப்படம் ‘கடைசி விவசாயி’. இப்படத்திற்கு முதலில் இளையராஜா இசையமைத்திருந்தார். அவர் பின்னணி இசையில் ஏற்கனவே கடந்த ஆண்டு அப்படத்தின் முதல் டிரைலர் வெளியானது.
அதற்கடுத்து இயக்குநருக்கும் இளையராஜாவிற்கும் கருத்து வேறுபாடு எழுந்த காரணத்தினால் ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் 2-வது டிரைலரின் பின்னணி இசை சந்தோஷ் நாராயணன் தான். இந்நிலையில் தன் அனுமதியைக் கேட்காமலும் தனக்குத் தெரியாமலும் இசையமைப்பாளரை மாற்றியதாக ‘கடைசி விவசாயி’ படக் குழுவினர் மீது இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா புகார் அளித்திருக்கிறார். டிசம்பர் இறுதியில் வெளியாக இருந்த இப்படம் இந்த புகாரால் சிக்கலைச் சந்தித்திருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிக்பாஸ் சீசன் 9 : டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்!
திங்கள் 19, ஜனவரி 2026 11:18:05 AM (IST)

டாக்ஸிக் டீஸருக்கு எதிராக மகளிர் ஆணையத்தில் புகார்
வியாழன் 15, ஜனவரி 2026 8:03:51 AM (IST)

பொங்கல் ரேசில் களமிறங்கும் புதிய படங்கள்!
திங்கள் 12, ஜனவரி 2026 8:30:02 PM (IST)

பராசக்தி படத்திற்கு யுஏ சான்றிதழ்: நாளை வெளியாகிறது
வெள்ளி 9, ஜனவரி 2026 12:58:38 PM (IST)

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:19:49 AM (IST)

ஜன நாயகன் வெளியாகும் நாளே உண்மையான திருவிழா: விஜய்க்கு ஆதரவாக சிம்பு, ரவி மோகன்!
வியாழன் 8, ஜனவரி 2026 4:52:28 PM (IST)

