» சினிமா » செய்திகள்
மாநாடு படக்குழுவினருக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு
செவ்வாய் 7, டிசம்பர் 2021 11:43:08 AM (IST)
தமிழ் சினிமாவுக்கு புதிய மற்றும் பொழுதுபோக்கான ஒரு அனுபவம் என ‘மாநாடு’ படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ‘மாநாடு’ படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘மாநாடு’ படத்தை மிகவும் புத்திசாலித்தனமான முறையில் எழுதி இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. சிம்பலரசன் கலக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா அற்புதமாக நடித்துள்ளார். யுவனின் இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். டைம் லூப் கதைக்களம் அருமையாக கைகொடுத்துள்ளது. தமிழ் சினிமாவுக்கு புதிய மற்றும் பொழுதுபோக்கான ஒரு அனுபவம். இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏகே 64 படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்
சனி 24, ஜனவரி 2026 4:12:47 PM (IST)

டி20 உலகக் கோப்பைக்கு அனிருத் இசையில் புதிய பாடல்!
சனி 24, ஜனவரி 2026 3:21:08 PM (IST)

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன்!
வியாழன் 22, ஜனவரி 2026 10:15:27 AM (IST)

பிக்பாஸ் சீசன் 9 : டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்!
திங்கள் 19, ஜனவரி 2026 11:18:05 AM (IST)

டாக்ஸிக் டீஸருக்கு எதிராக மகளிர் ஆணையத்தில் புகார்
வியாழன் 15, ஜனவரி 2026 8:03:51 AM (IST)

பொங்கல் ரேசில் களமிறங்கும் புதிய படங்கள்!
திங்கள் 12, ஜனவரி 2026 8:30:02 PM (IST)

