» சினிமா » செய்திகள்
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!
திங்கள் 17, ஜனவரி 2022 11:43:39 AM (IST)

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்து வருபவர் கமல்ஹாசன். நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என அவரது படங்களிப்பு சினிமாவில் முக்கியத்துவம் பெற்றது. அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.
அடுத்து இந்நிறுவனம் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். 2017ல் கௌதம் கார்த்திக் நடித்து வெளிவந்த 'ரங்கூன்' படத்தை இயக்கியவர் இவர்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனது திறமையால் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தவர் சிவகார்த்திகேயன். தற்போது 'அயலான், டான்' படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் 20வது படமான, அப்படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. கமல்ஹாசன் தயாரிக்க உள்ள புதிய படம் சிவகார்த்திகேயனின் 21வது படம்.
தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் மற்ற ஹீரோக்களை வைத்து எப்போதாவது ஒரு முறைதான் கமல்ஹாசன் படங்களைத் தயாரிப்பார். இதற்கு முன்பு 1987ல் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படத்தில் சத்யராஜ், 2003ல் 'நளதமயந்தி' படத்தில் மாதவன், 2019ல் 'கடாரம் கொண்டான்' படத்தில் விக்ரம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்போது அந்தப் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார். இதற்கான அறிவிப்பை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாதி ஆதிக்கம், பண பலத்தை நொறுக்கியுள்ளது தவெக வெற்றி - பா.ரஞ்சித் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 5:05:04 PM (IST)

விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது! - விஜய்க்கு பார்த்திபன் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 12:33:35 PM (IST)

ஜனநாயகன்' படக் கசிவு விவகாரம்: துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
வெள்ளி 1, மே 2026 11:04:13 AM (IST)

100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

சல்மான் கான் - நயன்தாரா கூட்டணியின் புதிய படம்: ஈகைத் திருநாளுக்கு வெளியீடு!
சனி 25, ஏப்ரல் 2026 11:55:40 AM (IST)

