» சினிமா » செய்திகள்
கரோனாவிலிருந்து குணமடைந்தார் கீர்த்தி சுரேஷ்!
செவ்வாய் 18, ஜனவரி 2022 5:04:52 PM (IST)
கரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகிவிட்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ் அறிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கடந்த வாரம் அறிவித்தார். அவர் விரைவில் குணமடைய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகிவிட்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், நெகட்டிவ் என்ற வார்த்தை தான் இன்றைய காலகட்டத்தில் பாசிட்டிவ். உங்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. உங்களுக்கு இனிமையான பொங்கல் மற்றும் சங்கராந்தி இருந்திருக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்துள்ளார். மேலும், தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவிருக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:35:06 PM (IST)

தென் தமிழ்நாட்டின் அரசியலை மையப்படுத்தி படம்: பைசன் குறித்து மாரி செல்வராஜ்..!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:44:24 AM (IST)

கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் இயக்குநர்கள் : எஸ்.ஏ.சந்திரசேகரன் வருத்தம்
சனி 11, அக்டோபர் 2025 4:11:49 PM (IST)

வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ்.டி.ஆர். நடிக்கும் அரசன்!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 4:10:03 PM (IST)

ரஜினி- ஸ்ரீதேவி காம்போ : ட்யூட் படம் குறித்து இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!
திங்கள் 6, அக்டோபர் 2025 11:01:43 AM (IST)

நேரடியாக ஓடிடியில் ரிலீசாகும் அருள்நிதியின் ராம்போ..!
சனி 4, அக்டோபர் 2025 12:33:18 PM (IST)
