» சினிமா » செய்திகள்

விண்வெளியில் ஒலிக்கும் இளையராஜாவின் இசை!

புதன் 19, ஜனவரி 2022 11:47:58 AM (IST)

இஸ்ரோ உதவியுடன் உலகில் மிகச்சிறிய செயற்கை கோள்கள் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு அங்கு இளையாராஜா பாடல் ஒலிபரப்பப்படவுள்ளது.

தனது இசையின் மூலம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சிவருபவர் இளையராஜா. புத்தாண்டு என்றாலும் இளையாராஜா பாடல், பொங்கல் என்றால் இளையராஜா பாடல் என நம் வாழ்வுடன் கலந்துவிட்டது அவரது இசை. அவருக்கு பிறகு தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இருப்பினும் அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் ரசிகர்களுக்கு தற்போதுவரை இசை விருந்து படைத்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்துக்கு அவர் தான் இசை. 3 தலைமுறைகளாக ஆட்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில் இளையராஜாவின் பாடல் இனி விண்வெளியிலும் கேட்க விருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த குழு ஒன்று இஸ்ரோ உதவியுடன் உலகில் மிகச்சிறிய செயற்கை கோள்கள் ஒன்றை உருவாக்கியுள்ளதாம். இது நாசாவின் உதவியுடன் வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த செயற்ககைக்கோள் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு அங்கு இளையாராஜா பாடல் ஒலிபரப்பப்படவுள்ளது. இதற்காக இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் நடந்த புதுமுகளை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ள இந்தப் பாடலை இளையராஜா இசையமைத்து பாடியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory