» சினிமா » செய்திகள்
நடிகை சித்ரா வழக்கை திசை திருப்ப ஹேம்நாத் நாடகம்: பெற்றோர் குற்றச்சாட்டு!
சனி 14, மே 2022 4:17:56 PM (IST)
நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கை திசை திருப்ப, ஹேம்நாத் நாடகமாடுகிறார்' என, சித்ராவின் பெற்றோர் கூறினர்.

கடந்த மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஹேம்நாத் புகார் அளித்தார். கொன்றுவிடுவோம்அதில், 'சித்ராவின் தற்கொலைக்கு பின்னணியில் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளனர்.'மாபியா கும்பலிடம், எனக்கு தெரிந்த நபர்கள் பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். அதற்கு என்னையும் உடந்தையாக்க பார்க்கின்றனர். மறுத்தால் கொன்றுவிடுவோம் என மிரட்டுகின்றனர்' என, கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில், சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:என் மகள் தைரியமான பெண். அவரை ஹேம்நாத் கோழையாக்கிவிட்டார். என் மகள் தற்கொலை செய்து கொண்டார் என, ஒரு நாளும் கூறமாட்டோம். நீதி வேண்டும்அவரை ஹேம்நாத் கொன்றுவிட்டார். அவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ளது.
சித்ராவின் தற்கொலைக்கு பின்னணியில் முன்னாள் அமைச்சர்கள் இருப்பதாக கூறுகிறார். அப்படியானால் மனைவிக்கு தொல்லை கொடுக்கும் நபரை, இவர் என்ன செய்திருக்க வேண்டும்.என் மகளின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம். வழக்கை திசை திருப்ப இப்போது நாடகமாடுகிறார். என் மகளுக்கு, புகை, மது குடிக்கும் பழக்கம் இல்லை. என் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என, போராடி வருகிறோம். அ.தி.மு.க., ஆட்சியில் புகார் அளித்தோம்; நடவடிக்கை இல்லை
.ஆட்சி மாறியவுடன் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். முதல்வரை சந்திக்க முயற்சித்தோம். முதல்வர் தனிப்பிரிவில் மனு அளியுங்கள் என கூறிவிட்டனர். கடும் தண்டனைபோலீஸ் கமிஷனர் அலுவலகம் உட்பட பல இடங்களில் புகார் அளித்தும், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.என் மகளை போல, இன்னொரு பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. போலீசார் தீர விசாரித்து, குற்றம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகார்த்திகேயனின் பராசக்தி பொங்கல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 13, செப்டம்பர் 2025 10:51:37 AM (IST)

லோகா திரைப்படத்தின் வெற்றி எதிரொலி : காந்தா ரிலீஸ் தேதி மாற்றம்!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:32:03 PM (IST)

விக்ரம் படம் டிராப்... ஃபகத் பாசிலை இயக்கும் மெய்யழகன் இயக்குநர் பிரேம் குமார்!
புதன் 10, செப்டம்பர் 2025 12:37:31 PM (IST)

பொங்கல் ரிலீஸ் பந்தயத்தில் விஜய் உடன் மோதும் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:08:06 PM (IST)

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!
திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் இன்பன் உதயநிதி!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:47:54 PM (IST)
