» சினிமா » செய்திகள்
நெஞ்சுக்கு நீதி படக்குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
செவ்வாய் 17, மே 2022 12:30:42 PM (IST)

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின், படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர், ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இணைந்து தயாரித்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி. அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்டிகிள் 15 என்ற படத்தின் ரீமேக் இது. இதில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். ஆரி அர்ஜுனா, தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் இப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்தார். பிறகு, படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் உள்ளிட்ட படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெங்கட் பிரபுவின் புதிய படத்திற்கு இளையராஜா - யுவன் கூட்டணி இசை..!
வியாழன் 23, ஜூன் 2022 3:37:36 PM (IST)

மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்: ரஜினி வாழ்த்து
வியாழன் 23, ஜூன் 2022 12:28:37 PM (IST)

மாற்றுத்திறனாளி இசைக்கலைஞர் திருமூர்த்தியை நெகிழவைத்த கமல்ஹாசன்
வியாழன் 23, ஜூன் 2022 11:05:13 AM (IST)

விஜய் பிறந்த நாள்: வாரிசு படத்தின் போஸ்டர் வெளியீடு!
புதன் 22, ஜூன் 2022 3:46:10 PM (IST)

ராதிகாவை ஏன் அம்மானு கூப்டணும்? நடிகை வரலட்சுமி அதிரடி
செவ்வாய் 21, ஜூன் 2022 11:50:33 AM (IST)

தவறான சிகிச்சையால் முகம் வீங்கிய நடிகை: மருத்துவர் மீது புகார்!
செவ்வாய் 21, ஜூன் 2022 11:37:00 AM (IST)
