» சினிமா » செய்திகள்

பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையின்போது நடிகை மரணம்!

செவ்வாய் 17, மே 2022 3:31:12 PM (IST)

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்  பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் நடிகை உயிரிழந்தார். 

கன்னட நடிகை நடிகை சேத்தனா ராஜ் (21) கீதா, பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் உடல் எடைமற்றும் கொழுப்பு குறைப்பு சிகிச்சைக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்  நேற்று அனுமதிக்கப்பட்டார் காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகைக்கு ‘கொழுப்பு அகற்றும் ’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மாலையில் அவரது நுரையீரலில் நீர் தேங்கத் தொடங்கியதால் நடிகை உடல்நிலையில் திடீர் என பின்னடைவு ஏற்பட்டது.

நடிகை பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை குறித்து தனது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என்றும், தனது நண்பர்களுடன் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேத்தனாவின் பெற்றோர் தங்கள் மகள் மரணத்திற்கு டாக்டரின்  அலட்சியமே காரணம் என்று புகார் கூறி உள்ளனர். சேதனாவின் உடல் தற்போது மருத்துவமனையில் வைக்கபட்டு உள்ளது, பிரேத பரிசோதனைக்காக ராமையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மருத்துவமனைக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory