» சினிமா » செய்திகள்
ஆதி - நிக்கி கல்ராணி திருமணம்: திரையுலகினர் வாழ்த்து
வெள்ளி 20, மே 2022 3:05:53 PM (IST)

சென்னையில் நடைபெற்ற நடிகர் ஆதி - நடிகை நிக்கி கல்ராணி திருமண விழாவில் திரையுலகினர் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.
மிருகம், ஈரம், அரவான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம், கிளாப் உட்பட பல படங்களில் நடித்தவர் ஆதி. டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கோ-2,கலகலப்பு-2, சார்லி சாப்ளின்-2உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நிக்கி கல்ராணி. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம்தெரிவித்ததை அடுத்து மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமணம் நேற்று அதிகாலை நடந்தது. இதில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். நடிகர் சங்கத் தலைவர் நாசர்,துணைத் தலைவர் பூச்சி முருகன்,இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவிஸ்ரீ பிரசாத், நடிகர்கள் விஜயகுமார், ஜீவா, அருண் விஜய், ஆர்யா, பாக்யராஜ், பூர்ணிமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனிருத் செய்த உதவி.. மேடையிலேயே கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!
புதன் 8, ஏப்ரல் 2026 5:03:35 PM (IST)

அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம்: வைரமுத்து வரவேற்பு
புதன் 8, ஏப்ரல் 2026 11:38:50 AM (IST)

தலைவர் 173 படப்பிடிப்பு ஏப்.27-ல் தொடக்கம்: சிபி சக்கரவர்த்தி தகவல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:28:02 PM (IST)

சூர்யாவின் கருப்பு: தெலுங்கு டைட்டில் வெளியீடு!
சனி 4, ஏப்ரல் 2026 11:08:41 AM (IST)

கேரவனில் அத்துமீறியதாக நடிகை புகார்: மலையாள இயக்குநர் ரஞ்சித் கைது!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:56:42 PM (IST)

பாலிவுட்டில் மீண்டும் நயன்தாரா: சல்மான் கானுடன் முதல்முறையாக ஜோடி சேர்கிறார்!
புதன் 1, ஏப்ரல் 2026 11:54:13 AM (IST)

