» சினிமா » செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

புதன் 15, ஜூன் 2022 11:23:06 AM (IST)



விக்ரம்' திரைப்படம் வெற்றிப் பெற்றதை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, காயத்ரி, செம்பன் வினோத் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. படம் வெளியாகி 11 நாட்கள் கடந்து விட்ட நிலையில், உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை நெருங்கி வருகிறது 'விக்ரம்'. 

படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அண்மையில் நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி. தொடர்ந்து, கேரளாவில் லோகேஷ் கனகராஜ், அனிருத் கலந்துகொண்ட படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. படத்தின் வெற்றிக்கு ரசிகர்களிடம் நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் 'விக்ரம்' வெற்றியையொட்டி, ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார். விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார். முன்னதாக விக்ரம் வெளியான முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory