» சினிமா » செய்திகள்
துப்பாக்கி சுடும் போட்டி: பதக்கங்களைக் குவித்த அஜித்!
சனி 30, ஜூலை 2022 4:17:27 PM (IST)

திருச்சியில் நடந்த மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் குமார் 4 தங்க பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார். அவர் 10மீ, 25மீ, 50 மீ துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்றார். முன்னதாக திருச்சி வந்த அஜித் குமார் ரசிகர்களை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் அவர் 4 தங்க பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளாராம். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். நடிகர் அஜித் குமார் நடிகராக மட்டுமல்லாமல், புகைப்படங்கள் எடுப்பது, கார், பைக் பந்தயங்களில் பங்கேற்பது போன்ற இதர விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிக்பாஸ் சீசன் 9 : டைட்டில் வென்றார் திவ்யா கணேஷ்!
திங்கள் 19, ஜனவரி 2026 11:18:05 AM (IST)

டாக்ஸிக் டீஸருக்கு எதிராக மகளிர் ஆணையத்தில் புகார்
வியாழன் 15, ஜனவரி 2026 8:03:51 AM (IST)

பொங்கல் ரேசில் களமிறங்கும் புதிய படங்கள்!
திங்கள் 12, ஜனவரி 2026 8:30:02 PM (IST)

பராசக்தி படத்திற்கு யுஏ சான்றிதழ்: நாளை வெளியாகிறது
வெள்ளி 9, ஜனவரி 2026 12:58:38 PM (IST)

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:19:49 AM (IST)

ஜன நாயகன் வெளியாகும் நாளே உண்மையான திருவிழா: விஜய்க்கு ஆதரவாக சிம்பு, ரவி மோகன்!
வியாழன் 8, ஜனவரி 2026 4:52:28 PM (IST)

