» சினிமா » செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 10:58:09 AM (IST)



சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

'மண்டேலா' பட இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கும் புதிய படம் 'மாவீரன்'. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். படத்தில் நாயகியாக அதிதி சங்கர் நடிக்கிறார். மேலும், யோகிபாபு, மிஷ்கின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  'டான்' படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் ரிலீஸுக்காக தயாராக இருக்கிறது. இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டார். படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசிய நடிகர் கைது

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 10:49:29 AM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory