» சினிமா » செய்திகள்
மாரி செல்வராஜ் - உதயநிதியின் மாமன்னன் படப்பிடிப்பு நிறைவு
புதன் 14, செப்டம்பர் 2022 10:54:06 AM (IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.
‘பரியேறும் பெருமாள்’ ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ என்கிற புதிய படத்தை இயக்கிவந்தார். படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
’மாமன்னன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதையொட்டி கேக் வெட்டி படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடினர்.