» சினிமா » செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பெருமைகள் தெரியுமா? மும்பையை அசர வைத்த விக்ரம்

திங்கள் 26, செப்டம்பர் 2022 9:29:58 PM (IST)



சாய்ந்த கோபுரத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் தஞ்சை பெரிய கோயில் பெருமைகள் தெரியுமா? என பேசி நடிகர் விக்ரம் மும்பையில் வியக்க வைத்துள்ளார். 

மும்பையில் நடந்த விழாவில், ராஜ ராஜ சோழனின் பெருமைகளை, ரமணா படத்தில் விஜயகாந்த் புள்ளி விவரங்களோடு சொல்லி கைத்தட்டலைப் பெற்ற காட்சி போல, ராஜ ராஜ சோழன் கட்டிய அணை முதல், ஊர்களுக்கு பெண்களின் பெயர்களை சூட்டியது என அனைத்தையும் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அதுவும் மும்பை வாழ் மக்களுக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்தில் பேசி அங்கே இருந்த அனைவரையும் அசர வைத்துள்ளார் விக்ரம்.

நேராக நிற்காத பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், நம்மிடம் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. தஞ்சை பெரிய கோயில் இருக்கிறது. அவற்றுக்கெல்லாம் எந்த பிளாஸ்டரும் பயன்படுத்தவில்லை. கிரேன் அல்லது பிளாஸ்டர் போன்றவை எல்லாம் இல்லாத காலத்திலேயே, மிகப்பெரிய கோபுரத்தைக் கட்ட 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாய்வுதளம் அமைத்து பல டன் எடைகொண்ட கற்களை கோபுரத்தில் ஏற்றியிருக்கிறார்கள்.  அது மட்டுமல்ல, சுமார் 6 நிலநடுக்கங்களைத் தாண்டியும் கோயில் நிலையாக நிற்கிறது என்று கூறினார் விக்ரம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory