» சினிமா » செய்திகள்
சர்வதேச இந்திய திரைப்பட விழா: கமல்ஹாசன், மாதவனுக்கு விருது!!
செவ்வாய் 30, மே 2023 12:54:59 PM (IST)

சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் நடிகர் மாதவன் சிறந்த டைரக்டருக்கான விருதை பெற்றார். அவர் டைரக்டு செய்து நடித்த ராக்கெட்டரி படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்டரி படத்தை மாதவன் இயக்கி இருந்தார்.
உளவு பார்த்ததாக போலி குற்றச்சாட்டில் சிக்கி சிறை தண்டனை மற்றும் சித்ரவதையை அனுபவித்த நேர்மையான விஞ்ஞானியின் வாழ்க்கை சம்பவங்களை இந்த படத்தில் மாதவன் பதிவு செய்து இருந்தார். இதில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். படத்தை மாதவனே தயாரித்தும் இருந்தார். தற்போது ராக்கெட்டரி படத்துக்காக சிறந்த டைரக்டர் விருது பெற்றுள்ள நிலையில் மாதவனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்து ஜி.டி.நாயுடு வாழ்க்கை கதையிலும் மாதவன் நடிக்க இருக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி : தக் லைஃப்: இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 4:28:30 PM (IST)

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)
