» சினிமா » செய்திகள்
தமிழர்களின் இசை அடையாளம் இளையராஜா : சீமான் புகழாரம்
சனி 3, ஜூன் 2023 4:34:16 PM (IST)
தமிழர்களின் இசை அடையாளம் இளையராஜா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.
இளையராஜாவின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
"பண்ணைபுரம் தந்த பைந்தமிழ்ப் பாட்டிசை மேதை!
காலத்தைக் கடந்து நிற்கும் காவியப் பாடல்களை உயிர்ப்பிக்கும் தங்கத் தமிழிசையின் தாயகம்!
உலகம் தழுவி தமிழினத்தின் முகவரியைத் தனது தேனிசைக் கரங்களால், தன் ராக வரிகளால் பொறித்த இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை அரசன்!
ஒவ்வொரு தமிழனின் உள்ளும் புறமும் நிரம்பி வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் ததும்பி கொண்டே இருக்கும் வற்றாத இசை ஊற்று!
உலகத்தில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் மண் மணம் மாறாத தன் மங்கா இசையால் தமிழர்களின் நினைவுகளை மீட்டி, தாய் நிலத்தின் கனவுகளை ஊட்டி ஆற்றுப்படுத்தும்
அன்னைத் தமிழின் இசைக் கருவறை!
தரணியில் எம் தமிழ் தங்கும் வரை,
உலவுகின்ற காற்று இந்த உலகத்தில் உள்ளவரை,
காதுள்ள மனிதர்கள் இந்த பூமியில் பிறக்கும் வரை,
எம் மண்ணின் ஈடு இணையற்ற இசைக் கலைஞன் இசைஞானி இளையராஜா இருந்து கொண்டே இருப்பார்.
தமிழர்களின் இசை அடையாளம்!
எல்லைகள் அற்ற இசைமேதை இளையராஜா அவர்களின் பிறந்த நாளில் ஐயாவை வாழ்த்தி வணங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. இவ்வாறு அறிக்கையில்சீமான் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம் எதிரொலி : தக் லைஃப்: இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!
வெள்ளி 9, மே 2025 4:28:30 PM (IST)

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)
