» சினிமா » செய்திகள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..!
திங்கள் 25, செப்டம்பர் 2023 3:41:58 PM (IST)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து அவர் இயக்கத்தில் நடிப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளப் பதிவில், "என்னுடைய 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் சொன்ன கதை கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன்.இந்தப் படம் எல்லாவிதத்திலும் எனக்கு முக்கியமான படம். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக இன்னும் என்னால் காத்திருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் ரெட்ரோ படத்தைப் பாராட்டிய ரஜினி!
செவ்வாய் 6, மே 2025 3:37:13 PM (IST)

பொன்னியின் செல்வன் பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த இடைக்காலத் தடை!
செவ்வாய் 6, மே 2025 12:33:56 PM (IST)

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
