» சினிமா » செய்திகள்

வாக்களிக்காதது தனிப்பட்ட உரிமை: ஜோதிகா விளக்கம்!

வெள்ளி 3, மே 2024 5:06:20 PM (IST)

தனிப்பட்ட காரணங்களுக்காக மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்று நடிகை ஜோதிகா கூறியுள்ளார். 

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி தங்களது குடும்பத்துடன் வாக்களித்துள்ளார்கள். ஆனால் இதில் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா பங்கேற்கவில்லை.அந்தச் சமயத்தில் நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேபாளுக்கு சுற்றுலா சென்றுள்ள விடியோ புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தது அந்த நேரத்தில் விவாதத்துக்கு உள்ளானது.

ஜோதிகா தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். சைத்தான் பட வெற்றிக்குப் பிறகு பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. மேலும் ஹிந்தியில் இணையத்தொடர் ஒன்றிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்ரீகாந்த்’ என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பு தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. இதில் செய்தியாளர் சந்திப்பில், "சமூக பொறுப்பு குறித்து பேசுகிறீர்கள்.. தேர்தலில் நீங்கள் வாக்களிக்கவில்லை என பலரும் விமர்சித்தார்கள்.. அதற்கு உங்கள் பதில் என்ன?" என கேள்வி எழுப்பினர்.

செய்தியாளரின் கேள்விக்கு நடிகை ஜோதிகா, "வருடத்துக்கு ஒரு முறை வாக்களிக்கிறோம். (ஐந்து எனக் குறுக்கிட்டு செய்தியாளர் சொன்னவுடன்) ஆமாம் மன்னிக்கவும், 5 வருடத்துக்கு ஒரு முறை வாக்களிக்கிறோம். சில நேரங்களில் வேலை காரணமாக நாம் வெளியூர்களில்/ வெளிநாடுகளில் இருக்க வேண்டியிருக்கிறது. அது எங்களது தனிப்பட்ட உரிமை. அதற்கு மதிப்பளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory