» சினிமா » செய்திகள்
கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் தக் லைஃப் படத்தில் சிம்பு
புதன் 8, மே 2024 12:25:50 PM (IST)
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வருகிறது தக் லைஃப். இப்படத்தின் தல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்கிடையே, துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படும் நிலையில், அவருக்குப் பதிலாக சிம்பு இப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்பட்டது.
மேலும், தில்லியில் தொடங்கியுள்ள அடுத்தகட்ட படப்பிடிப்பில், நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் கமலுக்கு மகனாக சிம்பு நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.