» சினிமா » செய்திகள்

நடிகர் ரஜினியை சந்தித்த ‘ஆர்டிஎக்ஸ்’ படக்குழு!

வியாழன் 9, மே 2024 5:51:55 PM (IST)



ஆர்டிஎக்ஸ்  படத்தின் இயக்குநர் நிகாஷ் ஹிதயாத், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் ஆகியோர் நடிகர் ரஜினியை சந்தித்தனர். 

கேரளத்தில் ஓணம் வெளியீடாக திரைக்கு வந்த படம் ஆர்டிஎக்ஸ்- ராபர்ட் டோனி சேவியர். ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடிப்பில் ஆக்சன் படமாக இது உருவாகியிருந்தது. அதேநாளில், கிங்க் ஆஃப் கொத்தா திரைப்படமும் வெளியானது. ஆனால், அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ரசிகர்கள் ஆர்டிஎக்ஸ் பக்கம் திரும்பினர். 

தமிழ் சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவு மாஸ்டர்கள் அட்டகாசமான சண்டைக் காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்கள். தமிழ் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

மஹிமா நம்பியார் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார். சண்டைக் காட்சிகள் பெரிதும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.  இப்படம் உலகளவில், ரூ.100 கோடியை வசூலித்தது. இந்நிலையில் இதன் இயக்குநர் நிகாஷ் ஹிதயாத், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் மாஸ்டர்கள் நடிகர் ரஜினியை சந்தித்தார்கள். நடிகர் ரஜினி வேட்டையன் படப்பிடிப்பில் இருக்கிறார். 80 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்ததாக சமீபத்தில் ரஜினி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory