» சினிமா » செய்திகள்
சூரி, சசிகுமார் நடித்துள்ள கருடன் ட்ரெய்லர் வெளியீடு!
செவ்வாய் 21, மே 2024 4:53:27 PM (IST)
சூரி, சசிகுமார் நடித்துள்ள ‘கருடன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ: