» சினிமா » செய்திகள்

காதலர் தினம் கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்

சனி 15, பிப்ரவரி 2025 3:36:49 PM (IST)



சினிமா துறையைச் சேர்ந்த காதல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் பலர் நேற்று காதலர் தினத்தை கொண்டாடி உள்ளனர்.

கீர்த்தி சுரேஷ்:- நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி பருவ நண்பர் ஆண்டனி தட்டிலை கடந்த டிசம்பர் மாதம் 12-ந் தேதி கோவாவில் காதல் திருமணம் செய்தார். திருமணம் முடிந்து முதல் காதலர் தினத்தை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் ஒருவருக்கொருவர் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

நாக சைதன்யா:- நடிகர் நாக சைதன்யா-நடிகை சோபிதா துலி பாலா காதல் திரு–மணம் கடந்த டிசம்பர் மாதம் 4-ந்தேதி ஐதரா–பாத்தில் நடந்தது. காதலர் தினமான இன்று தங்களது காதலர் தின வாழ்த்துக்–களை தெரிவித்–துள்ளனர். இதே போன்று வரலட்சுமி சரத்குமார், நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதல் திருமணம் செய்தார்.

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ்-தாரிணி என்பவரை திருமணம் செய்தார். இதே போன்று காதல் திருமணம் செய்த திரை உலக பிரபலங்கள் பலர் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory