» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (திருநெல்வேலி)

நாசரேத் சுற்றுவட்டாரத்தில் காமராஜர் 115வது பிறந்த தினவிழா

ஞாயிறு 16, ஜூலை 2017 12:01:38 PM (IST)

நாசரேத் சுற்றுவட்டாரத்தில் காமராஜர் 115-வது பிறந்த தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில்; காமராசரின் 115வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் ஏ.செல்வின் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் முதுகலை தமிழாசிரியர் மகாராசன், பள்ளி ஆட்சி மன்ற குழு உறுப்பினரும், கனோன் மர்காஷிஸ் சபை மன்ற செயலர் மோசஸ் கிருபைராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ஜாண் செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார். பின்பு மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

சொற்பொழிவு, இசைபாடல், நடனம் மற்றும் குறு நாடகங்கள் மூலம்; காமராஜரின் பெருமை சிறப்பிக்கப்பட்டது. தமிழ் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, ஆங்கில கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.இறுதியாக முதுகலை இயற்பியல் ஆசிரியர் குணசீலராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை முதுகலை தமிழாசிரியை ஜெபமரிய ஸ்டெல்லா தொகுத்து வழங்கினார்.நாசரேத் கே.வி.கே. சாமி சிலை பஜாரில் மனோகரன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து கேசரி வழங்கப்பட்டது.நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளியில் காமராஜரின் 115-வது பிறந்த நாள் விழா நடந்தது.பள்ளித் தாளாளர் லயன்புஷ்பராஜ் தலைமை வகித்து காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றிபேசினார்.முதல்வர் ஆக்னஸ் வரவேற்றார். மாணவ,மாணவி களுக்கு கட்டுரை போட்டி,பேச்சு போட்டி மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் 115-வது பிறந்த தின விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவில் கதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தூத்துக் குடி மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ஜோசப் ஜெயசீலன் பரிசு வழங்கினார். தலைமையாசிரியர் ஜாண்சன் பால் டேனியல் வரவேற்றார். நாசரேத் சந்தி பஜாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த பெருந்தலைவர் காமராஜர் 115-வது பிறந்த தின விழாவில் அவரது படத்திற்கு வட்டாரத் தலைவர் விஜயராஜா மாலைஅணிவித்து லட்டு வழங்கினார்.விழாவில் மாவட்ட துணைத் தலைவர் ஜோசப் ஜெயசீலன், ஜஸ்டின்,நகர பொருளாளர் அசோக்,தனசிங், எட்வின், பாக்;கியராஜ், முன்னாள் கவுன்சிலர் விஜி,வட்டார செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் தூ.நா.தி.அ.க.துவக்கப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்ததினவிழா கல்விவளர்ச்சி நாளாக கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப் பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வேல், மகேந்திரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி காமராஜர் குறித்து சிறப்புரையாற்றினர்.மேலும் பள்ளிக்குதேவையான பொருட்களை இலவசமாக வழங்கினர். தலைமை யாசிரியை ஆக்னஸ்ஜான்சி வரவேற்று பேசினார். 


மக்கள் கருத்து

வ.ஜோயல் ஆசீரJul 17, 2017 - 07:25:00 AM | Posted IP 8.37.*****

வாழ்த்துகிறேன். ஆனால் துக்க வீட்டிற்கே செல்வது நலம் என எழுத பட்டுள்ளது.டாஸ்மாக் கடை போராட்டத்துக்கு ஏன் வரவில்லை. சரி காமராசரை போல பிறர் பணத்தில் வாழாமல் இருந்தால் சரி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory