» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

முதல்வராக சசிகலாவுக்கு தகுதியில்லை; மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை: தீபா பேட்டி

செவ்வாய் 7, பிப்ரவரி 2017 4:52:26 PM (IST)தமிழக மக்கள் சசிகலாவுக்கு வாக்களிக்கவில்லை. ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகளாக இருந்தது, முதல்வருக்கான தகுதியில்லை. என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் தீபா கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை விளக்க வேண்டும். நேற்று மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து விளக்கியது ஏற்றுக்கொள்ளும்படியாகவும், போதுமானதாகவும் இல்லை. இரண்டு மாதங்கள் கழித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்தது ஏன்? என்ற சந்தேகம் உள்ளது.

இதுவரை நான் என்ன செய்தேன் என்று கேட்டால், அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால், ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடரவே நான் அரசியலுக்கு வந்தேன். மக்கள் எனக்கு பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். தொண்டர்கள் அழைப்பின் பேரில்தான் அரசியலுக்கு வந்தேன். ஆசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே என் குறிக்கோள். நான் தொடர்ந்து அரசியலில் பணியாற்றுவேன். தேர்தலில் போட்டியிடுவேன். வரும் 24-ம் தேதி அன்று ஒரு முக்கிய முடிவை அறிவிக்க உள்ளேன்.

உண்மைக்குப் புறம்பாக சசிகலா செயல்படுகிறார். ஒருவருடன் 33 ஆண்டுகளாக இருந்தது, முதல்வருக்கான தகுதியில்லை. சசிகலா முதல்வராகத் தேர்வானதை ஏற்க முடியாது. தமிழக மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. சசிகலா முதல்வரானால் தமிழகத்தில் நிலையற்ற தன்மை தொடரும். சசிகலாவைக் கண்டு எனக்கு எந்தப் பயமும் இல்லை. ஜெயலலிதாவின் மருத்துவ செலவுக்கான 5.5 கோடி ரூபாயை நான் கொடுக்கவில்லை என்று தீபா கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory