» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அமைச்சர் வளர்மதியை போனில் வறுத்தெடுத்த பெண்: வாட்ஸ்அப் உரையாடல் வைரலாக பரவுகிறது

வெள்ளி 10, பிப்ரவரி 2017 9:01:03 AM (IST)

பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும்படி, ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சர் வளர்மதியை போனில் கேள்வி கேட்கும் உரையாடல் வாட்ஸ்அப்பில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.,வும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சருமான வளர்மதி, தற்போது சசிகலா தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களுடன் சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு புதன்கிழமை(பிப்.,8) மாலை, ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. 

அந்த உரையாடல் வருமாறு:

இளம்பெண்: ஹலோ.. குட் ஈவினிங் மேடம்..

வளர்மதி: குட் ஈவினிங்

இளம்பெண்: மேடம் நீங்க யாருக்கு சப்போட் பண்ணுவீங்க.

வளர்மதி: அதை எல்லாம் அடுத்தவங்ககிட்ட சொல்லக்கூடாது.

இளம்பெண்: அப்படி இல்ல மேடம். நான் அ.தி.மு.க., அடிமட்ட உறுப்பினர். எனக்கு தெரியணும். நான் உங்கள் தொகுதி. உங்களுக்குத்தான் ஓட்டுபோட்டேன். அதனால் தான் கேட்கிறேன். நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள்.

வளர்மதி: ஏம்மா.. இரட்டை இலை சின்னத்துக்கு தானே ஓட்டு போட்ட..

இளம்பெண்: ஆமாம் மேடம்.

வளர்மதி: சரி, இப்ப உனக்கு என்ன வேணும்.

இளம்பெண்: நீங்க யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறீங்கண்ணு தெரியணும்.

வளர்மதி: அதை எப்படியம்மா வெளியே சொல்வாங்க. நீங்க ஓட்டு போட்டதை சொல்வீங்களா?.

இளம்பெண்: நான் உங்களுக்கு தான் ஓட்டுப்போட்டேன்.

வளர்மதி: அதற்கு என்ன இப்போது, தொகுதில தண்ணி பிரச்சினை எதுவும் இருந்தா சொல்லுங்க. பண்ணித்தரேன்.

இளம்பெண்: ஜெயலலிதா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

வளர்மதி: நான் முதலில் சொல்றத கேளும்மா..

இளம்பெண்: தயவுசெஞ்சு நல்ல முடிவை எடுங்க. அம்மாவுக்கு துரோகம் செய்யாதீங்க. நான் கெஞ்சிக் கேக்கிறேன். உங்க கால்ல விழுந்து கேக்குறேன்.

வளர்மதி: இருமா.. இருமா... நீங்க, நான் இப்ப ஓ.பி.எஸ்.,க்கு ஓட்டுபோடனும்னு தான், அப்ப எனக்கு ஓட்டு போட்டீங்களா?

இளம்பெண்: இல்ல மேடம்.. அப்படி இல்ல..

வளர்மதி: ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளும்மா..

இளம்பெண்: சரி மேடம்.. சொல்லுங்க.

வளர்மதி: சின்னம் தான் எங்களுக்கு, கட்சிதான் எங்களுக்கு..

இளம்பெண்: அதற்காக கட்சியை யாரிடம் வேண்டுமானாலும் கொடுத்துட முடியுமா?.

வளர்மதி: இத்தனை நாளும் ஓ.பி.எஸ்., எங்க இருந்தாரு.. அங்கதான இருந்தாரு..

இளம்பெண்: ஆமாம் மேடம், அங்கு மரியாதையே இல்ல, ஓ.பி.எஸ்.,சை மிரட்டியிருக்காங்க.

வளர்மதி: இத்தனை நாள் ஓ.பி.எஸ்., எங்கு இருந்தார். அவருக்கு அங்க மரியாதை கொடுத்தாங்கலாம்மா.

இளம்பெண்: ஓ.பி.எஸ். சாருக்கு மரியாதை கொடுக்கல...

வளர்மதி: நான் சொல்றதை கேளும்மா.. அவருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கலனு ஓடிப்போய்விட்டார். புரிஞ்சுதுங்களா?.

இளம்பெண்: எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மேடம்.

வளர்மதி: கட்சிக்கு துரோகம் பண்ணிட்டு போய்ட்டாரு.. அவருக்கு நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க. போன வைங்க..

இளம்பெண்: மேடம்.. மேடம்..

இவ்வாறு முடிவடையும் அந்த உரையாடல், வாட்ஸ்அப்பில் வைரலாக வலம்வந்து கொண்டிருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory