» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் திமுக ஆட்சி விரைவில் மலரும்: நல்லாட்சியை வழங்குவோம்: ஸ்டாலின் நம்பிக்கை

ஞாயிறு 12, பிப்ரவரி 2017 10:19:00 PM (IST)

தமிழகத்தில்  திமுக ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் யார் முதல்வராவது என்ற போட்டியில் அரசு நிர்வாகம் குட்டிச்சுவராகிக் கிடக்கிறது. ஹாசினி என்கிற பிஞ்சின் கொடூரக் கொலை பற்றி முதல்வரும் கண்டு கொள்ளவில்லை. போலீஸ் கமிஷனரும் எட்டிப் பார்க்கவில்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சிறுமி ஹாசினி குடும்பத்துக்கு நீதியையும், இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

"தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளே.. நம்மைப் பொறுத்தவரை, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்படுகிற இயக்கம் தான் திமுக. எளிய மக்கள் பக்கம் கவனத்தைத் திருப்புவோம். ஆள்பவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்போம். நமது ஆட்சி விரைவில் மலரும் காலம் வரும். அப்போது அனைத்து மக்களையும் பாதுகாக்கும் நல்லாட்சியை வழங்குவோம் என்று என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

சுகுமாரன்.சீ.அ,Feb 21, 2017 - 08:49:42 PM | Posted IP 117.2*****

இப்போதைய நிலையில் திமுகவை விட்டால் வேறு பெரிய தொண்டர் பலம் மிக்க கடசி இல்லை.ஸ்டாலின் தலைமை மிகவும் தேவை.

கேட்ச்Feb 14, 2017 - 11:33:55 AM | Posted IP 82.19*****

வரவேற்கிறோம் சீக்கிரம் வாங்க, நாட்டில் எந்த தொழில் முன்னேற்றமும் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, எங்கும் ஊழல் லஞ்சம், தயவு செய்து நாள் ஆட்சி தருங்க

saamyFeb 13, 2017 - 10:17:52 AM | Posted IP 117.2*****

இவரு வேற அப்பப்ப காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு - பழசா போனது எல்லாம் பரணையில்தான் உக்காரனும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory