» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழ்நாட்டின் அரசியல் குழப்பத்திற்கு பாஜவை குறை சொல்வதா? வெங்கய்யா நாயுடு கேள்வி

புதன் 15, பிப்ரவரி 2017 5:26:17 PM (IST)

தமிழகத்தில் பாஜவுக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. அப்படியிருக்க, தற்போது நிலவும் குழப்பத்திற்கு பாஜவை எப்படி குறை சொல்லலாம்? என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் சுப்ரீம் கோர்ட் நேற்று 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த சூழலில், தமிழக நிலவரம் குறித்து ஐதராபாத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசியல் குழப்பத்தில் பாஜவுக்கு ஒரு வேலையும் இல்லை. பாஜவுக்கு சட்டமன்றத்தில் ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. அப்படியிருக்கும் போது, நாங்கள்தான் குழப்பம் செய்கிறோம் என்று யாராவது சொன்னால் நம்ப முடியுமா? 

எங்களுக்கு எம்எல்ஏக்கள் யாரும் இல்லாத நிலையில், தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் பாஜவின் பங்கு எதுவும் கிடையாது. தற்போது நிலவும் அரசியல் குழப்பத்திற்கு காரணம், அதிமுகவின் உட்கட்சி பூசல்தான். ஜெயலலிதாவின் கொள்கைப்படி செயல்படும் தலைவரே அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அதிமுகவில் நடைபெறும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. அரசியல் சாசனப்படி கவர்னர் தனது கடமையை நிறைவேற்றுவார். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜ தலையிடாது. அதிமுகவுடன் பாஜவுக்கு எப்போதும் நல்ல உறவு உள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory