» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பெரும்பான்மையை நிரூபித்து அதிமுக ஆட்சி தொடரும் : முதலமைச்சர் பேட்டி

வியாழன் 16, பிப்ரவரி 2017 7:31:32 PM (IST)

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதல்வராக பதவியேற்ற பின்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மற்ற அமைச்சர்களும், அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அண்ணா, எம்ஜிஆர் நினைவிடத்தில் முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும், டிடிவி தினகரனும் மரியாதை செலுத்தினர். பின்னர் பேட்டியளித்த முதலமைச்சர் , சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என தெரிவித்தார்.சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு அதிமுக ஆட்சி தொடரும் எனவும் அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory