» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

காமராஜர் ஆட்சி அமையும் சூழல் உருவாகிவிட்டது: தூத்துக்குடியில் வசந்தகுமார் எம்எல்ஏ பேச்சு

வியாழன் 6, ஜூலை 2017 5:14:21 PM (IST)தமிழ்நாட்டில் மீண்டு்ம் காமராஜர் ஆட்சி அமையும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக வசந்தகுமார் எம்எல்ஏ தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகர், தெற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை, மற்றும் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார், வடக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை, வகித்தனர். 

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் மாநில தேர்தல் அதிகாரியும், மும்பை எம்எல்சியுமான சஞ்சய் தத், வசந்த குமார் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சஞ்சய் தத் பேசும்போது நமது தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளனர். அவர்களது கனைவ நிறைவேற்றும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என்றார். 

வசந்தகுமார் எம்எல்ஏ பேசுகையில், தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்று நாம் 50 ஆண்டுகளாக கனவு கண்டு வந்தோம். தற்போதைய அரசியல் சூழலில் இந்த கனவு நிறைவேற வாய்ப்புள்ளது என்றார். கூட்டத்தில் முன்னாள் எம்பி தனுஷ்கோடி ஆதித்தன், மாநில பொதுச் செயலளார் அருள் பெத்தையா, உதவி தேர்தல் அதிகாரி முருகன் முனிரத்தினம், மற்றும் மண்டல தலைவர்கள், வட்டத் தலைவர்கள் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

சாமிJul 10, 2017 - 01:33:15 PM | Posted IP 117.2*****

ஆசை நூறுவகை ------

ஸ்.சிவராமன்.Jul 6, 2017 - 08:39:11 PM | Posted IP 59.96*****

காமெடி.பண்ணாதீங்க.வசந்தகுமார்.அன்னா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory