» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பிரதமர் மோடியை அவமரியாதை செய்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.. தமிழிசை ஆவேசம்!

ஞாயிறு 3, செப்டம்பர் 2017 9:12:27 PM (IST)

பிரதமர் மோடியை அவமரியாதை செய்வதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை வானகரத்தில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மகள் திருமணத்தில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

அனிதா மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். பிரதமர் உருவபொம்மையை அவமதித்ததை காவல்துறை கண்டிக்கவில்லை. நீட் தேர்வுக்கும், பிரதமருக்கும் தொடர்பு இல்லை. நீதிமன்ற உத்தரவே நிறைவேற்றப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியில் கிராமப்புற மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் படித்தவர்களும் தமிழக மாணவர்கள் தான். பா.ஜனதா கட்சிக்கு எதிராக இந்த பிரச்சினையில் தி.மு.க. உள்பட பல கட்சிகள் அரசியல் செய்கிறது.

மாணவி அனிதா விவசாயம் சார்ந்த படிப்பு படிக்கலாம் என இருந்தபோது, அவரது உறுதியை குலைத்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்? தனியார் மருத்துவ கல்லூரிகள் இந்த போராட்டத்தின் பின்னணியில் உள்ளன. பா.ஜனதா கட்சிக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரசாரங்களை முறியடிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory