» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பதவி ஆசை இல்லையென்றால் நல்லக்கண்ணுவை முதல்வராக்குவாரா ரஜினி? திருமுருகன் காந்தி கேள்வி!

புதன் 3, ஜனவரி 2018 5:22:26 PM (IST)

பதவியாசை இல்லை என்று சொல்லும் ரஜினிகாந்த் நல்லக்கண்ணு ஐயாவை முதல்வராக்குவாரா என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகை குறித்து திருமுருகன் காந்தி காட்டமான கேள்விகளை முன் வைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் : ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பாஜகவின் நெருக்கடியால் நடக்கிறது. பாஜக இந்துத்துவாவை நிலை நிறுத்த முடியாத ஒரு காரணத்தால் தாங்களாகவே வாக்குவங்கியை உருவாக்க முடியாததால் ரஜினி, கமல் போன்றவர்களின் முகமூடிகளை பயன்படுத்தி வாக்குவங்கிகளை உருவாக்க நினைக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் தான் அதற்கான குறியீடுகளை ரஜினி தொடர்ச்சியாக வெளிக்காட்டுகிறார். முதலில் தன்னுடைய மேடையின் பின் திரையில் பாபா முத்திரையின் கீழ் வெள்ளை தாமரை முத்திரையை காட்டினார். அதன் பிறகு ஆன்மிக அரசியல் என்று பேசுவதெல்லாம் அதன் அடிப்படையில் தான். பாஜக இங்கு இரண்டாம் தர அரசியலை செய்கிறது, அதற்காக மக்கள் பணி செய்யத் தகுதியற்றவர்களை முன் நிறுத்துகிறது. ரஜினி ஒரு நடிகர் அவரை ரசிக்கலாம், அது வேறு. ரசிகர்களைக் கொண்டு வந்து அரசியலில் நிறுத்தினால் அது எப்படி மக்களுக்கு பயன் அளிக்கும். எந்த அடிப்படையில் ரஜினி மக்களை அணுக நினைக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை. 

25 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாக சொல்கிறார், இந்த காலகட்டத்தில் ஈழப்போர் நடந்து முடிந்திருக்கிறது, ராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் புயலால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். விவசாயிகள் போராட்டம், அணுஉலை எதிர்ப்பு போராட்டம் இதில் எல்லாம் அவர் என்ன செய்தார். இதை வைத்து தான் அவர் மக்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ரஜினி பேசினால் மாற்றம் வரும் என்று இருப்பவர் ஏன் இந்த பிரச்னைகளில் எல்லாம் அமைதியாக இருந்தார் என்பதே என்னுடைய கேள்வி.

ஓராண்டுக்கு முன்பு இருந்ததெல்லாம் தமிழகத்தில் பிரச்னை இல்லையா, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பாராட்டி மோடிக்கு டுவீட் போட்டவர், அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய அரசை எதிர்த்து ஏன் பேசவில்லை. தமிழ்நாட்டு சிஸ்டத்தின் தொடர்ச்சி இந்திய சிஸ்டத்தின் தொடர்ச்சி தானே. இந்திய சிஸ்டம் ஒழுங்காக இருந்திருந்தால் தமிழ்நாட்டு சிஸ்டம் ஒழுங்காக இருந்திருக்கும் அல்லவா. பாஜகவின் பி டீம் தான் ரஜினிகாந்த், ஸ்லீப்பர் செல் கமல் இவர்கள் இரண்டு பேருமே பிரதமர் மோடியை எதிர்த்து கேள்வி எழுப்ப மாட்டார்கள். இவர்கள் எப்படி நமக்கு சரியான நிலைப்பாட்டை தந்துவிட முடியும். பதவியாசை இல்லை என்று சொல்லும் ரஜினிகாந்த் நல்லக்கண்ணு ஐயாவை முதல்வராக்குவாரா என்றும் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து

நடுநிலையாளர்கள்Jan 4, 2018 - 03:15:11 PM | Posted IP 117.2*****

மிகசிறந்த கற்பனை - கையைக்கொண்டு கடல் அலையை நிறுத்த முடியாது தம்பி - அடுத்த எம்ஜியார் - இல்லையில்லை வாழும் எம்ஜியார் வந்தாச்சு-

நிஹாJan 4, 2018 - 01:18:51 PM | Posted IP 45.11*****

சரியான கேள்வி..

superமே 17, 1515 - 08:30:00 AM | Posted IP 122.1*****

பிரதர்

falconJan 4, 2018 - 12:54:43 PM | Posted IP 210.2*****

இவர்களுக்கு கருத்து சொல்ல தகுதி இல்லை. தமிழ் போலி போராளீஸ்

kannanJan 4, 2018 - 11:51:47 AM | Posted IP 122.1*****

sssss

உண்மைJan 4, 2018 - 11:36:39 AM | Posted IP 122.1*****

இதை ஏன் நீ திராவிட கட்சிகளிடம் கேட்கவில்லை?

எஸ் kayJan 4, 2018 - 10:31:11 AM | Posted IP 210.1*****

சூப்பர் சார்

மனிதன்Jan 4, 2018 - 09:35:10 AM | Posted IP 103.3*****

நல்ல கருத்து ஐயா சபாஷ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory