» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பஸ்களை அரசுடமை ஆக்கி நஷ்டத்தில் நடத்துவதுதான் திராவிட ஆட்சிகளின் சாதனையா? தமிழிசை கேள்வி

திங்கள் 8, ஜனவரி 2018 12:33:13 PM (IST)

தமிழகத்தில் பஸ்களை அரசுடமை ஆக்கி நஷ்டத்தில் நடத்துவதுதான் திராவிடக் கட்சி ஆட்சிகளின் சாதனையா? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 4 பஸ் மூலம் தனியார் முதலாளி லாபம் ஈட்டுகிறார். சுமார் 40,000 பஸ்களுக்கு மேல் இயக்கும் அரசு பல லட்சம் கோடிகள் நஷ்டம் என்று கூறி தொழிலாளரை வதைக்கலாமா? 

தொடரும் போராட்டம் காரணமாக பொதுமக்கள் அவதியும் தொடருகிறது. ஏன் இந்த அவலம்? பஸ்களை அரசுடமை ஆக்கி நஷ்டத்தில் நடத்துவதுதான் திராவிடக் கட்சி ஆட்சியாளர்களின் சாதனையா? நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை லாபத்தில் இயங்க தொழிலாளர்களையும் பங்குதாரர் ஆக மாற்றி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் தனியார் பஸ் தேவை? என்று பதிவிட்டுள்ளார்.
 


மக்கள் கருத்து

உண்மைJan 8, 2018 - 02:24:12 PM | Posted IP 122.1*****

டயர் என்ஜின் பல்ப் ஒன்னுவிடாம திருடனும்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory