» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ரஜினியின் தலைகீழ் அரசியல் நாட்டுக்கு நல்லதல்ல – மு.க. ஸ்டாலின் சொல்கிறார்

ஞாயிறு 28, ஜனவரி 2018 4:48:55 PM (IST)

ரஜினிகாந்த் அரசியலை தலைகீழாக பார்க்கிறார். அது நாட்டுக்கு நல்லதல்ல என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டி விவரம்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலை தலைகீழாக பார்க்கிறார். அவரின் பார்வை நாட்டிற்கு நல்லது இல்லை. ஆன்மிகத்தை நிறுவனமாக்க முற்படும்போதுதான் மதம் பிறக்கின்றது. நிறுவனப்படுத்தப்பட்ட மதம் ஆட்சி அதிகாரத்தை தன் கையில் வைத்துகொள்ள நினைக்கிறது. எதிர்க்கட்சிகள் என்ற ஒன்று இருக்கக் கூடாது என பாஜக நினைக்கிறது.

அரசியல் என்பது சினிமா இல்லை. ரஜினியும், கமலும் தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர்கள்; ஆனால் சினிமா என்பது அரசியல் இல்லை. முடிவு எடுப்பது எவ்வளவு பெரிய சுமை என்பது கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை மூலம் புரிகின்றது எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் நெருக்கடி நிலை காலத்தைவிட கருணாநிதி தீவிர அரசியலில் இல்லாத கடந்த ஓராண்டுகாலம் தான் பெருஞ் சுமையாக இருந்தது.

மதவாத அரசியலை எதிர்க்கும் திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. விரைவில் தமிழக மக்களின் விருப்பப்படி திமுக நிமிர்ந்து நிற்கும். குறுக்கு வழியில் ஆட்சிக்கு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. பாஜகவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது. கடந்த கால தவறுகளில் இருந்து திமுகவை மீட்டெடுக்க கட்சி விரும்புகிறது. சென்னை - ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தோல்வி என்பது திமுகவின் தோல்வியல்ல. அது நமது தேர்தல் அமைப்பின் தோல்வி. அடுத்து நாங்கள் எதிர்கொள்ளக்கூடிய பெரிய எதிரி மதஆதிக்க சகதிகளும் பண ஆதிக்க சக்திகளும்தான் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.


மக்கள் கருத்து

PillaiFeb 7, 2018 - 10:07:33 AM | Posted IP 202.1*****

Yes, he is a good leader after Kamaraj.

AmNairFeb 7, 2018 - 10:04:28 AM | Posted IP 202.1*****

Stalin is a good leader

சாமிJan 29, 2018 - 05:16:58 PM | Posted IP 180.9*****

மதவாத அரசியல் செய்பவர்கள் என்று நீங்கள் குறிப்பிடும் கட்சி போட்ட பிச்சையில் உங்கள் கட்சிக்காரர்கள் நான்கரை ஆண்டுகள் அமைச்சராக இருந்தார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory