» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மாணவர்கள் அரசியலை கண்காணிக்க மறந்ததால் தமிழகத்திற்கு இந்த நிலை: கமல்ஹாசன் பேச்சு!!

வியாழன் 8, மார்ச் 2018 12:10:25 PM (IST)

மாணவர்கள் அரசியலை கண்காணிக்க மறந்ததால்தான் தமிழகத்திற்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை அருகே காலவாக்கத்தில் கல்லூர் மாணவர்கள் இடையே மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் உரையாடல் நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில் மாணவர்கள் அரசியலை கண்காணிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. பள்ளி தாண்டாத என்னை கலைத்தான் காப்பாற்றியது. என் பாதையை தேர்ந்தெடுக்கும் உரிமையை தந்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 

கலை என்ற பாதையை கொண்டு முன்னேறியவன் நான். உங்கள் வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தியாக அரசியல் உள்ளது. மாணவர்கள் அரசியலை கண்காணிக்க மறந்ததால்தான் இந்த நிலை உள்ளது. மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே அரசியல் பயணம் செய்துவருகிறேன். ஆண்டின் 365 நாட்களும் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும். மக்களாட்சியை மகளிர்தான் மலர வைக்க வேண்டும். மக்கள் சேவையில் தான் தனது உயிர் பிரியும். தமிழகத்தை இளைஞர்கள்தான் முன்னேற்ற முடியும். 

இளைஞர்கள் உதவி இன்றி முன்னேற்றம் சாத்தியம் ஆகாது. சாமானியர்களால்தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். தேர்தலில் மக்கள் கண்டிப்பாக வாக்கு அளிக்க வேண்டும். அரசியலை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 17 பேர் எனது முயற்சிக்கு உதவ முன்வந்துள்ளனர். உலகத்தின் மையம் நாம்தான். மய்யத்தில் இருந்து பார்த்தால்தான் நாம் செல்லும் இடத்தை நேர்மையாக முடிவு செய்ய முடியும் என்றார் கமல்ஹாசன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory