» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜெயலலிதாவை விமர்சித்துவிட்டு அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர்: ரஜினி மீது சரத்குமார் தாக்கு

ஞாயிறு 11, மார்ச் 2018 9:54:23 AM (IST)

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் இந்த தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு  அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர் நடிகர் ரஜினிகாந்த்  என்று நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர்கள் கூட்டம் தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து சரத் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கி தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தள்ளிப்போகிறதா? என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் இந்த வாரியத்தை அமைப்பார்களா? என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. 

அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடி அழுத்தம் கொடுத்தால் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். இதைவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது. எல்லா விஷயத்திலும் தமிழகம் ஒதுக்கப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்தும், தண்ணீரின் அவசியம் குறித்தும் வருகிற 20-ந்தேதி மேட்டூர் தொடங்கி டெல்டா பகுதிகளில் 350 கிலோ மீட்டர் பயணம் செய்து மக்கள் மத்தியில் தெளிவுபடுத்துவோம். இறுதியாக திருச்சியில் பொதுக்கூட்டம் நடக்கும்.

ரஜினி, கமல் கட்சியை தொடங்கட்டும், கொள்கைகளை சொல்லட்டும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்பதை அப்புறம் பார்க்கலாம். 1996-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் இந்த தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு  அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர் நடிகர் ரஜினிகாந்த். இப்போது அதை பற்றி சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்த், கமல் பற்றி இனிமேல் நான் பேச விரும்பவில்லை. எம்.ஜி.ஆரை பற்றி அவர் இல்லாத சூழ்நிலையில் ரஜினிகாந்த் பேசுகிறார். இதற்கு முன்பு அவர் பேசியது கிடையாது. அதை இப்போது ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்கிறார். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆளவேண்டும். சந்தர்ப்பவாத அரசியல் தான் இப்போது நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

tamilanMar 12, 2018 - 02:31:21 PM | Posted IP 61.3.*****

அடுத்த முதல்வர் எங்க அண்ணன் சரத் குமார் தான்....

மனிதன்Mar 11, 2018 - 02:48:17 PM | Posted IP 103.2*****

சிம்பு வின் அரசியல் வருகை ரஜினி கமலுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் .

தமிழரசன்Mar 11, 2018 - 01:04:15 PM | Posted IP 27.62*****

பொட்ட நீ இதுவர ஜாருக்கு கூஜா தூக்குன. இப்போது நாயம் பேச வந்துட்ட

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory