» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழர்கள் பின்னால் நில்லுங்கள்; இல்லாவிட்டால் ஓடிவிடுங்கள் : ரஜினி முன்பு சத்யராஜ் ஆவேசம்

ஞாயிறு 8, ஏப்ரல் 2018 5:12:33 PM (IST)

குரல் கொடுக்க தைரியம் இருந்தால் தமிழர்கள் பின்னால் நில்லுங்கள்; இல்லாவிட்டால் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள் என்று ரஜினி முன்பு நடிகர் சத்யராஜ்,  ஆவேசமாகப் பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முண்ணனி நடிகர்கள் கலந்துகொண்டனர். காலை 9 மணியளவில் தொடங்கிய போராட்டம் மதியம் 1 மணியளவில் நிறைவு பெற்றது.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டைத் தர வேண்டும் என்கிற கோரிக்கை உட்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மேடையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அருகில் இருந்த சத்யராஜ் பேசுகையில், நான் என்றுமே தமிழ் மக்களுக்கு ஆதரவாகத்தான் இருப்பேன். தமிழர்களை உணர்வுகளை மதியுங்கள், அப்படி மதிக்காத எந்த அரசுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்; ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம். குரல் கொடுக்க தைரியம் இருந்தால் தமிழர்கள் பின்னால் நில்லுங்கள் ; இல்லாவிட்டால் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள் என்று ஆவேசமாகப் பேசினார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிApr 9, 2018 - 11:54:38 AM | Posted IP 141.1*****

தன்னால் அந்த பிரமாண்ட படம் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான் கர்நாடக மக்களிடம் வருத்தம் தெரிவித்தார். மற்றபடி ஒன்றும் இல்லை. ஆனால் ரஜினி அப்படி அல்ல

தமிழன்Apr 9, 2018 - 11:25:37 AM | Posted IP 162.1*****

பாகுபலி திரைப்படம் கர்நாடகாவில் வெளியிட, கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டதை இந்த சத்தியராஜ் மறந்துவிட்டாரா? மக்களை முட்டாள் ஆக்குவதே இந்த நடிகர்களின் செயல்...

ராஜாApr 9, 2018 - 10:35:41 AM | Posted IP 162.1*****

சரியான கருத்து அண்ணா...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory