» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்; நான் முதல்- அமைச்சராவேன் - திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி

வெள்ளி 27, ஏப்ரல் 2018 9:08:45 AM (IST)

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். நான் முதல்-அமைச்சராக வருவேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

தமிழ்நாடு மீனவ காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மீனவரணி தலைவர் கஜநாதன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமார், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, ஆலோசகர் அமீர்கான் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் அடையாள அட்டை எண்ணை காங்கிரஸ் கட்சியின் பிரத்யேக செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், கட்சி தகவல்கள் தொண்டர்களை நேரடியாக சென்றடையும். காங்கிரஸ் கூட்டங்களில் தொடர்ந்து 3 முறைக்கு மேல் பங்கேற்காத மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகளை மாற்றிவிடலாம் என்று ராகுல்காந்தி கூறியிருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து என்னை மாற்றப்போவதாக சிலர் வதந்தி பரப்புகிறார்கள். வரும் தேர்தலிலும், அடுத்த தேர்தலிலும் நான் தான் மாநில தலைவராக இருக்கப்போகிறேன். தொண்டர்கள் மனதை குழப்பிக்கொள்ளாமல் கட்சிக்காக உழைக்க வேண்டும்.

பஞ்சாயத்து தலைவராக முடியாதவர்கள் எல்லாம் முதல்-அமைச்சராகப் போவதாக கூறுகிறார்கள். காங்கிரஸ் தொண்டன் முதல்-அமைச்சர் ஆகக்கூடாதா? ஏன் நான் முதல்-அமைச்சராக வரக்கூடாதா? என்றாவது ஒருநாள் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். எந்த கட்சியுடனும் ஆயுட்கால கூட்டணி வைக்கமுடியாது. பா.ஜ.க. அரசு அகற்றப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. மம்தாவுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்ததை வைத்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பம் என்று கூறக்கூடாது. 

3-வது அணிக்கு செல்வதாக மு.க.ஸ்டாலின் கூறவில்லை. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும். எந்த காலத்திலும் 3-வது அணி, 4-வது அணியெல்லாம் ஆட்சிக்கு வரமுடியாது. கர்நாடக தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் பூத் கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். ராகுல்காந்தி பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

காங்கிரஸ்க்காரன்மே 12, 2018 - 02:18:49 PM | Posted IP 141.1*****

டேய் உனக்கு வெட்கமே இல்லையடா?

ராமநாதபூபதிApr 28, 2018 - 04:47:10 PM | Posted IP 141.1*****

வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது என்பது கருத்து சொன்ன சாமிக்கும் பொருந்தும். பேட்டியளித்த திருநாவுக்கரசருக்கும் பொருந்தும். அப்பப்பா என்ன வெயிலு

சாமிApr 27, 2018 - 12:44:56 PM | Posted IP 141.1*****

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடியார் தான்.அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory