» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மரியாதை இல்லை என்கிறாரா ஸ்டாலின்? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!!

செவ்வாய் 29, மே 2018 11:47:48 AM (IST)

ஸ்டெர்லைட் துப்பாகிச்சூடு விவகாரத்தில் எதிர்க் கட்சிகள், எதிரி கட்சி போல் செயல்பட கூடாது என அமைச்சர் மீன்வளத்துறை ஜெயகுமார் கூறினார். 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது, தூத்துக்குடி மாவட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால் இது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். 

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக, அமைச்சரவை எடுத்த முடிவுதான், அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளதாக கூறிய ஜெயக்குமார், அது அரசு எடுத்த முடிவுதான் என்பது கூட ஸ்டாலினுக்கு தெரியாதா? என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மரியாதை இல்லை என்கிறாரா ஸ்டாலின்? 

எதிர்க் கட்சிகள், எதிரி கட்சி போல் செயல்பட கூடாது. நீதிமன்றத்துக்கு ஸ்டெர்லைட் விவகாரம் சென்றாலும் தமிழக அரசின் நிலைப்பாடு ஆலை மூடல்தான்.ஸ்டெர்லைட் விவகாரத்தை அரசியலாக்க முடியாமல் போனதால் எதிர்க்கட்சிகள் குற்றத்தை தேடுகின்றனர் என கூறினார். ஸ்டெர்லைட் துப்பாகிச்சூடு விவகாரம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. தூத்துக்குடி எம்எல்ஏ சண்முகநாதன், தமிமுன் அன்சாரி, தினகரன் ஆகிய மூவரில் ஒருவர் தீர்மானம் கொண்டு வருகின்றனர். அவசர கவனதீர்மானமாக ஸ்டெர்லைட் விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிமே 30, 2018 - 11:21:57 AM | Posted IP 162.1*****

உத்தரவை விடுங்க சார். உங்களுக்கு இருக்கா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory