» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி

சனி 21, ஜூலை 2018 10:50:01 AM (IST)

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். 

மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் நேற்று காரசாரமான விவாதம் நடைபெற்றது. சிவசேனா, பிஜு ஜனதா தளம் கட்சிகள் விவாதத்தை புறக்கணித்த நிலையில், இரவு 11 மணியளவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

முதலில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பை தொடர்ந்து அடுத்ததாக மின்னனு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி அவையில் இருந்த 451 உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது வாக்களித்தனர். அதில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 325 பேரும், தீர்மானத்துக்கு ஆதரவாக 126 பேரும் வாக்களித்தனர். வாக்கெடுப்பிற்கு பிறகு மக்களவை திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதும் மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். "மக்களவை மற்றும் நாட்டின் 125 கோடி மக்களின் நம்பிக்கையை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றிருக்கிறது. இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி. புதிய இந்தியாவை உருவாக்கவும், இளைஞர்களின் கனவை நினைவாக்கும் முயற்சி தொடரும். ஜெய் ஹிந்த்” என மோடி டுவிட் செய்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory