» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கருணாநிதி, ஜெயலலிதாவை இழந்தது தமிழகம் : அரசியலை வழிநடத்த போவது யார்?

புதன் 8, ஆகஸ்ட் 2018 8:52:10 PM (IST)

திராவிட இயக்கங்களின் இருபெரும் அரசியல் தலைவர்களை இரண்டு வருட இடைவெளியில் தமிழகம் இழந்துள்ளது. இதனால் தமிழகஅரசியல் பாதையை எதிர்காலத்தில் வழிநடத்தி செல்லப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதியான திமுகதலைவர் கருணாநிதி நேற்றிரவு காலமானார். அவரது நல்லடக்கம் இன்றிரவு நடந்து முடிந்துள்ளது. கடந்த இரு வருடங்களாகவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனை, ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு, துாத்துக்குடி துப்பாக்கிசூடு, சேலம் 8 வழி சாலை என தொடர்ந்து பிரச்சனைகளாகவே இருக்கையில் கருணாநிதியின் அறிக்கைகளோ, பேட்டிகளோ, பொதுகூட்டங்களோ, கருத்துகளோ இல்லாமலே தமிழக அரசியல் நடைபெற்று வந்தது.

பொதுவாகவே தமிழகத்தில் சிறு பிரச்சனை நடந்தாலும் முதலில் அறிக்கை விடுபவர் கருணாநிதியாகத் தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கருணாநிதியை எதிர்த்து தீவிரமாக அரசியல் களத்தில் இயங்கி வந்த அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவும் கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ம் தேதி காலமானார். எம்ஜிஆர் இறந்த பிறகு கருணாநிதி,ஜெயலிதாவை சுற்றியே தமிழகஅரசியல் இயங்கி வந்தது. அந்த இரு தலைவர்களும் தேர்தலில் வெற்றி பெற்றாலும்,முக்கியமாக தோற்றாலும் தங்களது கட்சியை கட்டுகாேப்பாக நடத்தி வந்தனர். மத்திய அரசின் போக்கையே நிர்ணயிக்கும் அளவிற்கு பலமிக்கவர்களாக இருந்தனர். தேசிய தலைவர்களே இவர்களது வீடுதேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக கருணாநிதியும் ஜெயலிதாவும் பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உதாரணமாக ஜெ.,வின் அம்மா உணவகம் திட்டத்தை குஜராத் மாநில அதிகாரிகள் ஆய்வு நடத்தியதும், கருணாநிதியின் இலவச லேப்டாப் திட்டங்களை உத்திரபிரதேச மாநில அரசும் அறிமுகப்படுத்தியது. ஒரு சான்று. இந்தியாவின் வடமாநிலங்கள் தற்போது அறிமுகப்படுத்தும் திட்டங்களை இவர்களிருவரும் பல வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் அறிமுகப்படுத்தி விட்டனர். தொழில்துறை, கல்விதுறை, போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் தமிழகத்தை சிறப்பிடத்திற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் கொண்டு வந்தனர். 

இருப்பினும் கடந்த 2 வருடத்திற்குள் அந்த இருபெரும் அரசியல் தலைவர்களை தமிழகம் இழந்துள்ளது. இனி தமிழக அரசியல் பாதையை வழி நடத்த போகும் தலைவர்கள் யார் ? எதை நோக்கி அரசியல் நகரும். தேசிய அளவிலான அரசியலை இயக்கும் அளவிற்கு தலைவர்கள் கிடைப்பார்களா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory