» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ம் தேதி நாடு முழுவதும் பந்த்:காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

வெள்ளி 7, செப்டம்பர் 2018 10:28:51 AM (IST)

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 10-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, அசோக் கெலாட், அகமது படேல், மோதிலால் வோரா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று இதனை கூட்டாக அறிவித்தனர். நாடு முழுவதும் 10-ஆம் தேதி பெட்ரோல் நிலையங்களுக்கு முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதற்கு, எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.

மற்றொரு மூத்த தலைவரான அகமது படேல் கூறியதாவது: இடதுசாரி கட்சிகளிடம் போராட்டம் தொடர்பாக விளக்கப்பட்டது. சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளன. திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பதாக தெரிவித்தது. எனினும், மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருப்பதால் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடியாது என்றும் மறுத்துவிட்டது என்றார் அகமது படேல்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி விலகியபோது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தபோதிலும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.41-ம், டீசல் லிட்டருக்கு ரூ.55.49-ஆக இருந்தது. ஆனால், தற்போதைய பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் சர்வதேச அளவில் பீப்பாய் கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்படுகிறபோதிலும், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதன்மூலம் ரூ.11 கோடி வரியை கூடுதலாக மோடி அரசு ஈட்டியுள்ளது. இது மக்கள் மீது ஏற்றப்பட்ட சுமை என்று ரண்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory