» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

இலைச்சோற்றில் இமயமலையை மறைக்க முயல்கிறார் தங்கமணி : எ.வ.வேலு குற்றச்சாட்டு

வியாழன் 13, செப்டம்பர் 2018 1:25:29 PM (IST)

இலைச்சோற்றில் இமயமலையை மறைக்க முயல்கிறார் தங்கமணி என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதாக நினைத்து இலைச்சோற்றில் இமயமலையை மறைக்க முயல்கிறார். நிலக்கரி ஊழல், பணிநியமன ஊழல் உள்ளிட்டவை தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர் முன்வைத்துள்ள ஆதாரமிக்க குற்றச்சாட்டுகளைக் கேலி செய்யும் விதத்தில் பதில் அளித்திருப்பது, அமைச்சர் இன்னும் பண்படவில்லை என்பதையே காட்டுகிறது. 

ஊழலிலும், நிர்வாக சீர்கேட்டிலும், கடும் நிதிநெருக்கடியிலும் மூழ்கிக் கிடக்கும் மின் பகிர்மானக்கழகத்தை சீரமைக்க அமைச்சர் தங்கமணி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து, கற்பனைக் குதிரைகளை பறக்க விட்டு, ஊழல் கறையைப் போக்க முயற்சிப்பது வீண் வேலை என்றும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory