» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அடுத்த முதல்வர் டி.டி.வி. தினகரன் தான்: புகழேந்தி சொல்கிறார்!

வியாழன் 13, செப்டம்பர் 2018 5:51:25 PM (IST)

18 எம்எல்ஏக்கள் வழ்ககில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அடுத்த முதல்வர் டி.டி.வி. தினகரன் தான் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே உள்ள மருதூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே இருந்த பனிப்போர், தெரு சண்டையாக மாறி, ஓ.பன்னீர்செல்வம் வெளியே வரும் காலம் வந்து விட்டது.

தற்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 70 எம்.எல்.ஏ.க்கள், 10 அமைச்சர்கள் உள்ளனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதனால் அடுத்த முதல்வர் டி.டி.வி. தினகரன் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்லாததால், பயிர்கள் கருகி விவசாயிகள் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்களை தூர்வாரும் பணி முறையாக நடைபெறாதது தான்.

தூர்வாரும் பணிக்கான பொறுப்பை எடுத்து கொண்டு அதில் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி. டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் விவசாயம் பாதித்து தண்ணீர் கடலில் கலந்தது குறித்து கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கட்சி தலைவர்களும் பேசிக்கொள்கிறார்கள். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வாழ்நாளை சிறையில் கழித்த பேரளறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு, தமிழக கவர்னர் காலம் தாழ்த்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து

ஒருவன்Sep 13, 2018 - 07:57:54 PM | Posted IP 141.1*****

ஆட்சி கலைஞ்சிடும் அப்போவே சொல்றாங்க ஆனால் கலையவில்லை ... புது புதுசா கதை விடுறாங்களா ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory