» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை ஏன் அறிவிக்கவில்லை: தேர்தல் ஆணையர் விளக்கம்

சனி 6, அக்டோபர் 2018 5:03:31 PM (IST)

மழை  காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நான்கு மாநிலத் தேர்தலுடன் அறிவிக்கவிருந்த நிலையில் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் திமுக தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது, இதேபோன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் மறைவு காரணமாக தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நான்கு மாநிலத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க இருந்தது. இதனுடன் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதாக இருந்தது. 

இந்நிலையில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். நான்கு மாநிலத் தேர்தல் தேதிகளை அறிவித்த அவர் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாது என்று தெரிவித்தார். தமிழக தலைமைச் செயலர் கேட்டுக்கொண்டதால் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார். கனமழை உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி தலைமைச்செயலாளர் கேட்டுக்கொண்டதால் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை என்றும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory