» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பிரதமர் மோடியின் வெற்றுப்பேச்சுக்களால் ஒன்றும் ஆகவில்லை: விவசாயிகள் பேரணியில் ராகுல் பேச்சு

வெள்ளி 30, நவம்பர் 2018 5:22:54 PM (IST)

டெல்லியில் விவசாயிகள் பேரணியில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

விவசாய கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் மேற்கொள்கிறார்கள்.  207 விவசாய அமைப்புகள் இணைந்த அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அழைப்பின் பேரில், இப்போராட்டம் டெல்லியில் நடக்கிறது. நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்றுள்ளார்கள். அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்கள். 

பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதார விலை உயர்த்தப்படும்; போனஸ் வழங்கப்படும் என்றார். இப்போது நிலையை பாருங்கள். வெற்றுப்பேச்சுக்களால் ஒன்றும்  ஆகவில்லை. ஒன்றையும் அவர் நிறைவேற்றவில்லை. தொழில் அதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்தால் விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்திய விவசாயிகளுக்கு உறுதியளிக்கிறேன், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். பயம் கொள்ள வேண்டாம் என்றார். 


மக்கள் கருத்து

அட கருமமேDec 1, 2018 - 02:54:43 PM | Posted IP 172.6*****

ஆனால் உன்னைப்போல பொறுப்பற்று பேசவில்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory