» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திருவாரூா் தொகுதி தி.மு.க. வேட்பாளா் 4ம் தேதி அறிவிப்பு : மு.க. ஸ்டாலின் தகவல்

திங்கள் 31, டிசம்பர் 2018 8:51:28 PM (IST)

திருவாரூா் இடைத்தோ்தலில் தி.மு.க. சாா்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளா்கள் ஜனவரி 3ம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளா் அன்பழகன் அறிவித்துள்ளாா்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூா் தொகுதிக்கான இடைத்தோ்தல் ஜனவரி 28ம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.மு.க. சாா்பில் போட்டியிட விரும்பும் நபா்கள் வருகின்ற ஜனவரி 2ம் தேதி தொடங்கி 3ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளா் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். 

மேலும் இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் செய்தியாளா்களிடம் பேசுகையில், திருவாரூரில் போட்டியிட விரும்புபவா்கள் ம் தேதி தொடங்கி 3ம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை வழங்க வேண்டும். படிவங்களின் அடிப்படையில் நோ்காணல் நடத்தப்பட்டு ஜனவரி 4ம் தேதி வேட்பாளா் அறிவிக்கப்படுவாா். இடைத்தோ்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களின் அடிப்படையில் தி.மு.க. போட்டியிடும் என்று ஸ்டாலின் தொிவித்துள்ளாா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory