» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக்கூத்தா? இடைத்தேர்தல் ரத்து குறித்து விஜயகாந்த் கருத்து

திங்கள் 7, ஜனவரி 2019 5:21:21 PM (IST)

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக்கூத்தா? என கேள்வி எழுப்பியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்நிலையில் இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாரூர் இடைத்தேர்தலை அறிவித்த போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழக அரசோடு கலந்து பேசி முடிவெடுத்திருந்தால் ரத்து என்ற நிலை ஏற்பட்டிருக்காது. 

ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது கேலிக்கூத்தாக, கேள்விக்குறியாக மாறியிருப்பது கண்டனத்திற்குரியது. மக்கள் யாரும் தேர்தல் வேண்டும் என்று கேட்கவில்லை. வேண்டாம் என்றும் சொல்லவில்லை. புயல் பாதிப்பை அறியாமல் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததை மக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory