» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி அனுமதி அளிக்க கூடாது ப.சிதம்பரம் வலியுறுத்தல்

திங்கள் 18, மார்ச் 2019 10:53:55 AM (IST)

விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவியை அனுமதித்தால் தேர்தல் ஆணையதத்தின் மீதான நம்பகத்தன்மையும் சீர்குலைந்து விடும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் மூன்று தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை கடந்த மாதம் 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். தேர்தல் நேரத்தில் வழங்கப்படும் இந்த நிதியுதவிக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதவில், விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் மேலும் அனுமதிக்கப்படுமா? என்று அனைவரின் பார்வையும் தேர்தல் ஆணையத்தின் மீதே உள்ளது. தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் போது நிதியுதவி அளிப்பது என்பது ஒரு எளிமையான லஞ்சம் என்றும், இது ஓட்டுக்காக அளிக்கப்படும் லஞ்சம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. 

பணமதிப்பு நீக்கத்தை அனுமதித்ததன் மூலம் ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை சீரழிந்ததாக கூறியுள்ள ப.சிதம்பரம், அதைப்போல விவசாய நிதியுதவியை அனுமதித்தால் தேர்தல் ஆணையதத்தின் மீதான நம்பகத்தன்மையும் சீர்குலைந்து விடும் என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory